தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது.
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு நடைபெற உள்ளது என்பதும், இந்த தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1,21,617 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 1,12,890 பேர் மட்டுமே விண்ணப்பித்திருக்கின்றனர். மொழியில் எழுத 19,867 பேரும், அரசு பள்ளி மாணவர்கள் 8,727 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் அகில இந்திய அளவில் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வை எழுத நாடு முழுவதும் 16,14,714 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இது தவிர மாநில மொழிகளில் நீட் தேர்வை எழுதுவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது. குஜராத்தி மொழியில் 49,943 பேரும், பெங்காலியில் 35,118 பேரும், நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். ஒட்டுமொத்த எண்ணிக்கையான 16.14 லட்சம் பேரில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் மாணவியர் என்ற விவரமும் வெளியாகி உள்ளது.