நித்யானந்தாவின் கைலாசாவை  ஒரு நாடாக அங்கீகரித்தது – அமெரிக்க நகர நிர்வாகம்

நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அமெரிக்க நகர நிர்வாகம் அங்கீகரித்து உள்ளது. பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார்.

ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார். நித்யானந்தாவின் கைலாசா நாட்டை இறையான்மை பெற்ற நாடாக அங்கீகரித்து இருக்கிறது அமெரிக்க நெவார்க் நகர நிர்வாகம்.இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக கையெழுத்தாகிறது. நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நிவார்க் நகரத்தின் சார்பில் அதன் மேயரும் கைலாசாவின் தூதர் விஜயப்பிரியா நித்யானந்தாவும் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + = 15