நித்திய கல்யாணி சமேத ஸ்ரீசுயம்புநாதர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம் கோலாகலம்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, நல்லுச்சேரியில் உள்ள பழமை வாய்ந்த நித்திய கல்யாணி சமேத ஸ்ரீ சுயம்பு நாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவாரம் மற்றும் பிரதோஷம் முன்னிட்டு 108 சங்காபிஷேகம் மற்றும் ருத்ர ஹோமம் நடைபெற்றது.

முன்னதாக சுயம்பு நாதர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினர். சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வழிபட்டனர். உலக நன்மை வேண்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் கார்த்திகேயன் மற்றும் கணேசன் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 1 =