நாளை விடைபெறுகிறது வடகிழக்கு பருவமழை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன தகவல்

வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு சற்று தாமதமாக அக்டோபர் 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது.

வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31-ந் தேதியுடன் முடிவடைந்தாலும், அதன் தாக்கம் தென் மாநிலங்களில் தொடர்ந்தது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு சற்று தாமதமாக அக்டோபர் 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 44.3 செ.மீ. ஆனால் தற்போது ஒரு சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31-ந் தேதியுடன் முடிவடைந்தாலும், அதன் தாக்கம் தென் மாநிலங்களில் தொடர்ந்தது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை நாளை (வியாழக்கிழமை) விலகுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் அதை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளப் பகுதிகளில் இருந்து நாளை (12-ந்தேதி) விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்துக்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரம் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 7