நாளை முதல் 2 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே மாநிலத்திற்குள் நுழைய அனுமதி: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் நுழைவதற்கு 2 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

 பஞ்சாப் மாநிலத்தில் இனி நுழைவதற்கு கொரோனாவுக்கு எதிரான 2 தடுப்பூசி டோஸ்களையும் செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இந்த கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வருகிறது. பஞ்சாப் மாநிலத்துக்குள் சாலை வழியாகவோ, ரெயில் மூலமாகவோ, விமானம் மூலமாகவே வருகிற அனைவருக்கும் இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

கொரோனா பற்றிய ஆய்வுக்கூட்டத்தை மாநில முதல்வர் அமரிந்தர் சிங் சண்டிகாரில் நடத்திய பின்னர், இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள இமாசலபிரதேசம் மற்றும் ஜம்முவில் இருந்து வருகிறவர்கள்  தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரிய ஆசிரியைகள் அல்லது கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் மட்டுமே பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து நேரடியாக வகுப்புகள் எடுக்க முடியும் என்றும் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் கூறி உள்ளார். அனைத்து குழந்தைகளும் ஆன்லைன் வழியாக கற்பது தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

62 − 52 =