நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி:  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்.

தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை 16ம் தேதி உருவாகிறது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது: வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தமிழக கடலோர பகுதிகளில் வரும் 19ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 19ம் தேதி முதல் மழை படிப்படியாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

27 − 22 =