புதுக்கோட்டை அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பாலு என்ற முத்துக்கருப்பன் ஏற்பாட்டில் இன்று திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் மற்றும் பழ பந்தலை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்
சமீப காலமாக கோடை வெயில் மக்களை வாட்டி எடுக்கும் நிலையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் ஆலோசனைப்படி மாவட்டம் முழுவதும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த வகையில் சத்தியமங்கலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாலு என்ற முத்துக்கருப்பன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட கோடை தண்ணீர் பந்தல் மற்றும் பழபந்தலை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அன்னவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, முன்னாள் எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சாம்பசிவம், உதயம் ராஜா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இன்று அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் விதவிதமான பழங்கள் இளநீர் தர்பூசணி குளிர்பானங்கள் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.