புதுக்கோட்டையில் ஜனவரி 25ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் புதன்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த விழாவில் தமிழர் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பங்கேற்பதற்காக வருகை தரும் சீமானை வரவேற்க அவரது கட்சி நிர்வாகிகள் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள் மற்றும் விளம்பர பதாகைகளை வைத்து பிரமாண்டமாக வரவேற்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.