நாமக்கல் : மூளைச்சாவால் உயிரிழந்த திமுக பிரமுகரின் மகன் – 8 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதற்கு நன்றி நவிழும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நாமக்கல்லில் மூளைச்சாவால் உயிரிழந்த திமுக பிரமுகர் மகனின் 8 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதற்கு நன்றி நவிழும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு நகரத்தின் பொறுப்பு குழு உறுப்பினர் எம்.கிருஷ்ணமூர்த்தி மகன் கி.அஜித்குமார் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டு மறைவு எய்தியதையொட்டி அவரது உடல் உறுப்புக்களான கண், இதயம், கிட்னி, கல்லீரல், மண்ணீரல் உள்ளிட்ட 8 உடல் உறுப்புக்கள் தானம் செய்யபட்டது. அஜீத்குமார் மறைந்தாலும் அவரது உடல் உறுப்புகள் மூலம் பலரை வாழவைத்து கொண்டு உள்ளார்.

இதனைத்தொடர்ந்து முதல்வர் முக.ஸ்டாலின் ஆலோசனைப்படி, உயிரிழந்த அஜீத்குமாருக்கு மாவட்ட திமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு அவரது குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

அதன்படி, இன்று அஜித்குமாரின் பிறந்தாநாளினை முன்னிட்டு அவரது குடும்பத்தினருக்கு குடும்பநல நிதியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் நிகழ்வும், அவருடைய படத்திறப்பு விழாவும், அஜித் குமாரின் நண்பர்கள் குழு சார்பில் இரத்ததான முகாமும் நேற்று காலை 10 மணிக்கு NGGO’S காலனியில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் நாமக்கல் கிழக்கு நகர கழக பொறுப்பாளர் செ.பூபதி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட கழக பொறுப்பாளர் கேஆர்என் இராஜேஸ்குமார் பங்குபெற்று குடும்ப நல நிதியாக 1 லட்சம் ரூபாயை அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு வழங்கி தானம் செய்ததற்கு நன்றி நவிழும் சான்றிதழை வழங்கினார்.

பின்னர் மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என் ராஜேஸ்குமார் பேசும்போது:- சு.சே.மகன் தொல்காப்பியன் இறந்தபொழுது இரங்கல் செய்தியில் பேராசிரியர் அன்பழகன் “நாம் வாழ்கின்ற காலத்தில் நாம் பெற்ற தமயன் மறைவது கொடுமையிலும் கொடுமை” என குறிப்பிட்டிருந்த அந்த வரிகளை நினைவுபடுத்தி பேசினார். மேலும் இரத்த தானம் செய்தவர்களை பாராட்டி சான்று வழங்கினார்.

4 வது வார்டு செயலாளர் செவ்வேள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேற்கு நகர பொறுப்பாளர் அ.சிவக்குமார், தெற்கு நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த, மாநில இலக்கிய அணி புரவலர் சி.மணிமாறன், மாநில சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் நக்கீரன், பொறுப்பு குழு உறுப்பினர்கள், வார்டு கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள், முன்னோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அஜித்குமாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.