நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வருகிற 23-ம் தேதி பவர் கட்!!!

நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக வரும் 23-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது., நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் , இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான நாமக்கல்நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி,வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓஸ் காலனி, வீசாணம், சின்னமுதலைப்பட்டி ஆகிய பகுதிகளில் வருகிற வியாழக்கிழமை (23-09-2021) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

29 − = 25