நாமக்கல் அருகே பொதுமக்கள் சார்பில் ஏரிக்கரையில் பனை விதை விதைக்கும் பணி இன்று நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் எஸ்.வாழவந்தி ஏரிக்கரையில் நேற்று சின்னகரசப்பாளையம் ஊர் பொது மக்கள் மற்றும் மாணவர் மன்றத்தார் இணைந்து சுமார் 2000 பனை விதைகள் விதைத்தனர். இப்பணிக்கு விவசாய அமைப்பினரும் உறுதுணையாக இருந்தனர்.