நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி வசதிக்காக அமைக்கப்பட்ட புதிய செல்போன் டவரை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட திமுக செயலாளர் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்டம், நாமகிரிபேட்டை ஒன்றியம் பெரப்பன்ஞ்சோலை ஊராட்சி பள்ளிப்பாறையில் தொலைபேசி சிக்னல் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான ஆண்லைன் வகுப்புகளை பயில்வதற்கு இணையதள வசதி கிடைக்காத காரணத்தால் மாணவ மாணவிகள் உயரமான பகுதிக்கு சென்றும், மரத்தின் மீது ஏரியும் ஆன்லைன் வகுப்புகளை பயின்று வந்தனர்.
இந்நிலையில் மக்களின் கோரிக்கைகளை ஏற்று சம்பந்தபட்ட இடத்திற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட கழக பொறுப்பாளர் கேஆர்என் இராஜேஸ் குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வருகை புரிந்து இடத்தை பார்வையிட்டு கூடுதலாக புதிய டவர் அமைக்க இடம் தேர்வு செய்து தனியார் நிறுவனமான ஜியோ நிறுவனத்திடம் ஒப்படைத்தனர்.
அதன்பின் 30 நாட்களுக்குள் புதிய டவர் அமைக்கபட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மேலும் இந்த டவரின் மூலம் நான்கு கிலோமீட்டர் சுற்று அளவில் உள்ள சுமார் 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர்பு கொள்ளவும், மாணவ மாணவியர்கள் ஆன்லைன் வகுப்பு அதிகவேக 4G இணையதள வசதியும் ஏற்படுத்தபட்டுள்ளது.
இச்சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் பொருட்டு இன்று காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளர் கேஆர்என் இராஜேஸ் குமார் ஆகியோர் சேவையை துவக்கி வைத்தனர். இதில் வருவாய் கோட்டாட்சியர் கோட்டை குமார், ஒன்றிய செயலாளர் கேபி.இராமசாமி பங்கேற்றனர்
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் பேசும்போது, தனியார் நிறுவன செய்தி தொலைக்காட்சியின் மூலம் அறிந்த அந்த நாள் முதலில் இருந்து இந்த பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் உடனடியாக விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். தமிழக அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கியது. அதன்பயனாக இந்த டவர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தனியார் நிறுவனத்தின் மூலம் அமைக்கபட்டு சேவை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
மாவட்ட கழக பொறுப்பாளர் கேஆர்என் இராஜேஸ் குமார் பேசுகையில், இதனை விரைந்து முடிக்க அனைத்து வசதிகளும் ஏற்படித்தி கொடுத்த முதலமைச்சருக்கும் மாவட்ட கலெக்டருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞர் அணி ரமேஷ்குமார், கவுன்சிலர் சித்ரா சரவணன், முள்ளுகுறிச்சி கே.பி.சண்முகம், செக்கடி ஆறுமுகம், எம்.கதிரவன், கே.தமிழரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சி.விஸ்வநாத், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சர்தார், செந்தில், காந்தா, மோகன்குமார், பழனிவேல், குழந்தையன், பழனிசாமி, கிருஷ்ணன், முருகன், பரமேஸ்வரி, நடராஜன், விஜயகுமார் மற்றும் அரசு நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.