நாமக்கல் : ஆஞ்சநேயர்கோயில் குடமுழுக்கு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்த அரசுக்கு பக்தர்கள் நன்றி

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் இணை கோயில்களின் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு பக்த சபாக்கள் மற்றும் திமுக நகர பிரமுகர் டி.டி.சரவணன் உட்பட பொதுமக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது நாமக்கல் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட, நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் குடமுழுக்கு திருப்பணி, மோகனூர் அருள்மிகு காந்த மலை முருகன் திருக்கோயில் குடமுழுக்கு திருப்பணி, நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் திருத்தேர் புதுப்பிக்கும் திருப்பணி ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கி அனுமதி வழங்கிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், மாவட்டப் திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், இவற்றை பரிந்துரை செய்து பெற்றுத் தந்த நாமக்கல் சட்ட மன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் ஆகியோருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.