குடும்பத் தகராறில், ஆத்திரம் அடைந்து, கொதிக்கும் எண்ணையை, தலையில் ஊற்றி, கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் ஏ.எஸ். பேட்டையை சேர்ந்தவ டைலர் தங்கராஜ், 50. அவரது மனைவி செல்வராணி, 45. தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தையல் தொழில் செய்து வந்த தங்கராஜ், தினமும் குடித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.மேலும், போதையில், மனைவி மற்றும் குழந்தைகளை தகாத வார்த்தையால் பேசுவதுடன், அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த, 2ல், மாலை, 6:30 மணிக்கு, போதையில் வந்த தங்கராஜ், வழக்கம் போல், தனது மனைவி செல்வராணி, குழந்தைகளை திட்டியதுடன், அடித்து துன்புறுத்தி உள்ளார்.அதனால், ஆத்திரம் அடைந்த செல்வராணி, காய்ச்சி வைத்திருந்த எண்ணெயை எடுத்து, தனது கணவர் தங்கராஜின் தலைமையில் ஊற்றி உள்ளார். வலியால் கதறி துடித்த தங்கராஜை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தங்கராஜிடம், நாமக்கல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, மரண வாக்குமூலம் பெற்றார். அதில், ‘தன் மீது, கொதிக்கும் எண்ணையை ஊற்றியது, தனது மனைவி செல்வராணிதான்’ என, தெரிவித்தாக தெரிகிறது.இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ், சிகிச்சை பலனின்றி, அதிகாலை, 5:30 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து, செல்வராணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
நாமக்கல்லில் கொதிக்கும் எண்ணையை கணவரின் தலையில் ஊற்றி கொலை செய்த மனைவி கைது
