ஈமு கோழி மோசடி வழக்கில், பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறையும், ரூ.1.2 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துரையில் இயங்கி வந்த மதி ஈமு பார்ம்ஸ் நிறுவனம், கடந்த 2012ம் ஆண்டு, பல்வேறு கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து 51 பேரிடம் ரூ.1,33,87,500 பெற்று மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிறுவனத்தை நடத்திய தங்கவேலு என்பவரும் கைது செய்யப்பட்டார்.கோவை முதலீட்டாளர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, தங்கவேலுவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் ரூ.1 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார். மேலும் குணசேகரன் என்பவரை விடுதலை செய்தும் உத்தரவு பிறப்பித்தார்.