நாட்டில் புதிதாக பரவும் வைரஸ் காய்ச்சல் – இந்திய மருத்துவ ஆய்வு மையம் அறிவுரை

நாடு முழுவதும் சமீப காலமாக பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர் காய்ச்சலுக்கு  ‘எச்.3 என்-2’ என்ற வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் ‘எச்.3 என்-2’ வைரசால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும். தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதித்த ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக செல்கிறார்கள். இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

இந்நிலையில், “சமீபத்தில் நாடு முழுவதும் பலரை பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர் காய்ச்சலுக்கு, ‘எச்.3 என்-2’ வைரஸ் தான் காரணம். இது உயிருக்கு ஆபத்தானது இல்லை எனவும் சாதாரண பாரசிட்டமால் மாத்திரையே இதற்கு போதுமானது என்றும் அதிக நீர் அருந்துவது, முகக்கவசம் அணிவதன் மூலம் இதை தடுக்கலாம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

79 − 78 =