நாகுடி ஊராட்சியில் தூய்மையே சேவை என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன் நேரில் பார்வையிட்டார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நாகுடி ஊராட்சியில் தூய்மையே சேவை என்ற இலக்கினை மேம்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூய்மை பணியாளர்,பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் கிராமப்புறங்களில் சுகாதாரத்தை பின்பற்றுவது தொடர்பாக எடுத்துரைத்தார், அப்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இறையருள், கிருஷ்ணகுமார், மதியழகன்,மல்லிகா மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் நல்லையா நாகுடி ஊராட்சி செயலர் (பொறுப்பு) மாங்குடிகணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.