நாகர்கோவிலில் புதிய மாநகராட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் ரூபாய் 10.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மாநகராட்சி அலுவலக கட்டிடமான கலைவாணர் மாளிகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 4 தளங்களுடன் ரூ.10.50 கோடி செலவில் கலைவாணர் மாளிகை என்ற பெயரில் மாநகராட்சி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கூட்ட அரங்கம், லிப்ட் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

60 + = 63