நவ.22ல் திருநங்கைகளுக்கு குறைதீர் கூட்டம் தென்காசி ஆட்சியர் தகவல்

தென்காசியில் திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் வரும் 22ம் தேதி நடக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் வரும்.,22 ம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் லோன் மேளா நடைபெற உள்ளது. இந்த குறைதீர் நாள் முகாமில் உறுப்பினர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் போன்ற அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

மேற்கண்ட அசல் ஆவணங்கள் இல்லையெனில் அவற்றை வழங்குவதற்கும் வங்கிக்கடன், உதவி சுய வேலைவாய்ப்பு முகாம், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதிய திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்குதல், இலவச வீட்டு மனை பட்டா உள்ளவர்களுக்கு வீடு கட்டுவதற்கான திட்டம் மற்றும் திருநங்கைகள் நல வாரியம் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் திருநங்கைகள் விருப்பத்திற்கு ஏற்ப திறன் பயிற்சியும் வழங்கப்படும். எனவே குறைதீர்க்கும் நாள் முகாமில் திருநங்கைகள் கலந்துகொண்டு பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 36 = 42