நல்லாசிரியர் விருது பெற்ற  ஆசிரியருக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு கொடுத்த ஊர்ப் பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம் மேற்பனைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக சிகரம் சதீஷ்குமார் பணிபுரிந்து வருகிறார். 2006 ம் ஆண்டிலேயே சிகரம் தொட்ட ஆசிரியர் விருதைப் பெற்ற இவரது கல்விச் சேவையைப் பாராட்டி தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது சென்னையில் செப்டம்டர் 5 ஆம் தேதி பள்ளிக்கல்வி அமைச்சரால் வழங்கப்பட்டது. விருது பெற்று பள்ளிக்கு திரும்பிய நல்லாசியர் சதீஷ்குமாருக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மாலை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் ,கடைவீதியில் இருந்து மேளதாளம் முழங்க பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதே போல் ஊர்ப்பொதுமக்களும் நகரின் முக்கிய வீதிகள் அனைத்திலும் விளம்பர பதாகைகள் வைத்து வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பின்னர் ஊர்ப்பொதுமக்கள் பள்ளிக்குத் தேவையான மேசைகள், நாற்காலிகள், மின் விசிறிகள் மற்றும் ஏராளமான தளவாடச்சாமான்களை பள்ளிக்கு சீர்வரிசையாக வழங்கினார்கள். விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சுமதி தலைமையேற்று வரவேற்புரை ஆற்றினார்.

பள்ளிமேலாண்மைக்குழு தலைவர் நீலா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செந்தில்,ரோட்டரி கிளப் தலைவர் திருப்பதி, தொழிலதிபர் சிதம்பரம், கல்வியாளர் கார்மேகம், ராணியம்மாள் நாட்டியப்பள்ளி இயக்குனர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் உள்ளாசிப் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்,பெற்றோர்கள், ஊர்ப்பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் முத்துச்சாமி,ராஜா,கோபு, கலைவாணி ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக வட்டார அளவில் அளவில் கேரம் மற்றும் சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் குமரவேல், சபரிவாசன், வருணிகா ஆகியோருக்குப்பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 76 = 78