நரிக்குறவர் இன மக்களுக்கு வீடு வழங்கும் விழாவில் –பொங்கல் பரிசு 5 ஆயிரம் வழங்க
தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் வசித்து வரும் நரிக்குறவர் இன
மக்கள் கடந்த வடகிழக்கு பருவ மழையின் போது அவர்கள் வசித்து வந்த வீடுகள்
சேதமடைந்து, பாதிக்கப்பட்டு குழந்தைகளுடன் பரிதவித்து வந்ததை அறிந்த அதிமுக மாவட்ட
செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு தனது சொந்த செலவில்
நரிக்குறவர் இன மக்களுக்கு 20 வீடுகளை கட்டி முடித்து, வீடுகளை அவர்களிடம்
ஒப்படைக்கும் விதமாக விழா  ஏற்பாடுகளை இன்று  செய்திருந்தார்.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதல்வரும்,  சட்டமன்ற எதிர்க்கட்சி
தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வீடுகளை
நரிக்குறவ இன மக்களிடம் வழங்கினார், மேலும் ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான வீட்டு
உபயோகப் பொருட்களை அனைவருக்கும் வழங்கினார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் அதிமுக அரசு ஆட்சியில் இருந்தாலும்
இல்லாவிட்டாலும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருக்கும் அந்த
அடிப்படையில் தான் இன்று உளுந்தூர்பேட்டையில் உள்ள இந்த ஏழை மக்களுக்கு வீடு
கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது சொந்த செலவில் ஏழை மக்களுக்கு வீடு கட்டி
கொடுத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுருக்கு  பாராட்டுகளை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில் அதிமுக ஆட்சி காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்
பரிசாக ரூபாய் 2500 வழங்கியபோது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின் 5000 வழங்க
வேண்டுமென கோரிக்கை விடுத்தார், ஆனால் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஸ்டாலின்
தற்பொழுது பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் மட்டுமே வழங்கப்படும்
என அறிவித்துள்ளார், ஏன் 5000 வழங்க அறிவிக்கவில்லை என தமிழக அரசின் மீது குற்றம்
சாட்டினார்.  மேலும்  கரும்பு வழங்கப்படாது எனவும் அறிவித்தார், ஆனால் நான் குடும்ப
அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்க வேண்டுமென கண்டனம் தெரிவித்திருந்தேன், இதனைத்
தொடர்ந்து விவசாயிகளும் கண்டனம் தெரிவித்தனர், அதன் பின்னர் கரும்பு
வழங்கப்படுமென  ஸ்டாலின் அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள்
சட்டமன்ற உறுப்பினர்கள் அழகுவேல் பாபு, பிரபு, ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ்,
செண்பகவேல், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் சாய்ராம்,
மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், வழக்கறிஞர் பிரிவு உமாசங்கர், திலீப், நகர
மன்ற உறுப்பினர்கள் தேசிங்குராஜா, ராஜா, நகரத் துணைச் செயலாளர் கோபால், லயன்

வெங்கடேசன், தொழில்நுட்ப பிரிவு சாய்அருண், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட,
ஒன்றிய, கிளைக் கழக, சார்பு அணி, நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து
கொண்டனர். இறுதியில் நரிக்குறவர் இன மக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாசிமணிகள்
மற்றும் மாலைகள் அணிவித்து தங்களது மகிழ்ச்சிகளை தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 5 = 15