நரிக்குறவர்களுக்கு எஸ்டி சான்றிதழ் பகுஜன் சமாஜ் கட்சியின்  போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி  மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் டி.ஜெகன் பரபரப்பு பேட்டி

நரிக்குறவர்களுக்கு எஸ்டி சான்றிதழ் பகுஜன் சமாஜ் கட்சியின்  போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி  செங்கல்பட்டு மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் டி.ஜெகன் தெரிவித்துள்ளார். இது குறித்து  பகுஜன் சமாஜ் கட்சியின்  செங்கல்பட்டு மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் டி ஜெகன் கூறுகையில், நரிக்குறவர், குருவிக்காரர், மலையாள கௌடர் ஆகியோருக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. இதற்காக அச்சமுகத்தைச் சார்ந்த மக்கள் பல்வேறு அரசியல் கட்சிகளை தங்கள் பிரச்சனையை வெளிக்கொண்டு வருவதற்காக நாடினார்கள்.  இந்நிலையில் கௌதம மீனா  மூலம் இம்மக்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து இப்பிரச்சினையை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அதன் மூலம் அரசினுடைய கவனத்தை ஈர்க்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அதன்படி, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர்   கே.ஆம்ஸ்ட்ராங் வழிகாட்டுதலின்படியும் காஞ்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் கவிஞர் அ. முத்துகிருஷ்ணன்  ஆலோசனையின்படியும் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் தலைவரும் இந்நாள் ஒருங்கிணைப்பாளருமான டி.ஜெகன் தலைமையில் பல்லாவரம், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்  சிலை அருகில் நூற்றுக்கணக்கான நரிக்குறவர் மக்களை ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை பகுஜன் சமாஜ் கட்சி 30.9.2020 அன்று நடத்தியது. அதன்பிறகு இப் பிரச்சனை ஊடக வெளிச்சம் பெற்று தமிழகம் முழுமைக்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகள் இப்பிரச்சனைக்கு குரல் எழுப்ப தொடங்கினர். அந்த வகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் குரலுக்கும் அதனைத் தொடர்ந்து இன்ன பிற அரசியல் கட்சி தலைவர்களின் குரலுக்கும் மதிப்பளித்து மத்திய அரசு  அம்மக்களுக்கு தற்போது எஸ்டி சான்றிதழ் வழங்க ஒப்புதல் அளித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அந்த சமூக மக்கள் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் முன்னேற்றம் அடைய  பாபாசாகேப்  அம்பேத்கர்  கண்ட கனவுக்கும் தியாகத்திற்கும் கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

43 − 41 =