நமணசமுத்திரத்தில் மழைக்கால மருத்துவ முகாம் புதுகை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஏற்பாடு

முதல்வர் மருத்துவ காப்பீடுதிட்டத்தின் கீழ் மழைக்கால மருத்துவ முகாம் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தலின்படி, டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஹெச்.சலீம் வழிகாட்டுதலின்படி டீம் மருத்துவமனை சார்பாக புதுக்கோட்டை,  நமணசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவி முத்துலட்சுமி தலைமை தாங்கினார். தற்போதைய காலக்கட்டத்தில் நிலவி வரும் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பற்றியும், டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிறுவலி, எலும்புவலி, மயக்கம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவனைகளை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். கை, கால்களை சுத்தமாக அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சத்துநிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் விளக்கிக் கூறினர்.

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருக்கை மருத்துவர் சூர்யபிரகாஷ் அனைவருக்கும் பரிசோதனை, ஆலோசனை வழங்கினார். முகாமில் ரத்த அழுத்தம், உயரம், எடை, உடல் வெப்ப அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனை பொது மேலாளர் ஜோசப் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மதுபாலன் செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிவில் காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜ் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 9