நடுவலூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி : 25 பேர் காயம்

நடுவலூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 25 பேர் காயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே நடுவலூர் கிராமத்தில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா அறிவுறுத்தல் படி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

நடுவலூர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், துணைத் தலைவர் அசோக், ஒன்றிய கவுன்சிலர் கல்யாண சுந்தரம், ஊராட்சி செயலாளர் தங்கவேலு, மற்றும் கிராம நாட்டாமைகளை ஒருங்கிணைப்பாளர்களாக கொண்டு நடத்தப்பட்ட, இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 500க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. வாடிவாசலில் இருந்து திறந்து விடப்பட்ட காளைகளை அடக்கும் முயற்சியில், 180 ஜல்லிக்கட்டு வீரர்கள் ஈடுபட்டனர்.

காளைகளை அடக்கிய ஜல்லிக்கட்டு வீரர்கள், அவர்களுக்கு கட்டுப்படாமல் ஓடிய ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் ஆகியோர்களுக்கு, தங்க நாணயம், வெள்ளி நாணயம், சைக்கிள், டீ பாய், சில்வர் பாத்திரங்கள், பிளாஸ்டிக் சேர், உள்ளிட்டவை பரிசுப் பொருட்களாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில், 25 பேருக்கு லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

நடுவலூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ் கான் அப்துல்லா உத்தரவுப்படி, ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ராஜா சோமசுந்தரம் தலைமையில், டிஎஸ்பிக்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் ஏட்டுகள், ஊர்க்காவல் படையினர் உள்பட, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

98 − = 90