நடிகை காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து நீக்கம்: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அதிரடி!

நடிகை காயத்ரி ரகுராமை கட்சி பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கி தமிழக பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராமை கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாதம் நீக்கப்படுகிறார். இந்த ஆறு மாத காலத்திற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 2