நச்சாந்துபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வருகை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்களை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வழங்கினார், இதில் நச்சாந்துபட்டி, கீழா நிலை, கே.புதுப்பட்டி, அரிமளம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

மேலும் திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம. சுப்புராம், மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் ராம். கணேஷ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், முன்னாள் வடக்கு வட்டாரத் தலைவர் எஸ்.முருகேசன், தெற்கு வட்டாரத் தலைவர் ஆர்.எம்.மணிகண்டன், வடக்கு வட்டாரத் தலைவர் எஸ். கார்த்திகேயன்,அரிமளம் தெற்கு வட்டாரத் தலைவர் எம்.கணேசன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

76 − = 69