த.மா.கா. தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ். ஜி.கே.மூப்பனார் அரிமா சங்க தலைவராகவும் இருக்கிறார். இவரது மணிவிழா நிகழ்ச்சி த.மா.கா மற்றும் அரிமா சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரிமா மணிவண்ணன் தலைமை தாங்கினார். ஆர்.சம்பத் வரவேற்றார். பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் முன்னிலை வகித்தார். த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், டி.ஜெயக்குமார், பேராசிரியை பர்வீன் சுல்தானா, வக்கீல் எம்.பி.நாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
ஜி.கே.வாசன் பேசும்போது, த.மா.கா. பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையிலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னோடு பயணிப்பவர்களில் ஜி.ஆர்.வெங்கடேஷ் முதன்மையானவர். தனது மணி விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியாக நடத்துவது பாராட்டுக்குரியது என்றார். தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பார்வையற்றவர்கள், நலிந்தவர்களுக்கு உதவித் தொகைகளை வழங்கினார். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை போனில் வாழ்த்து தெரிவித்தார். கட்சி நிர்வாகிகள், அரிமா சங்கத்தினர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.