தொடர் மழையால் தத்தளிக்கும் அசாமில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி

தொடர் மழையால் தத்தளிக்கும் அசாமில் 22 மாவட்டங்களில் பாதிப்புபாதிக்கப்பட்ட7 லட்சம் மக்களை மீட்கும் பணியில் விமானப்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அசாமில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழை காரணமாக 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 7 லட்சத்து 20 ஆயிரம் பொது மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வௌ்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் உயிர் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியை விமானப் படை தீவிரப்படுத்தியுள்ளது. மீட்பு பணி மூலம் இதுவரை 26,236 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

கேச்சார் மாவட்டத்தில் ஒரே நாளில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிர் இழந்துள்ளனர். இதேபோல் ஹோஜை மற்றும் நாகான் மாவட்டங்களில் ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 95,473 ஹெக்டேர் நிலங்கள் வௌ்ளத் தண்ணீரில் மூழ்கி உள்ளன. 2095 கிராமங்களை வௌ்ளத் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வௌ்ளம் பாதித்த மக்களில் இதுவரை 91,518 பேர் மீட்கப்பட்டு 269 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 4 லட்சம் விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில் அசாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியை விமானப் படை தீவிரப்படுத்தியுள்ளது. விமானப் படையின் ஏஎன் 32 ரகவிமானங்கள், எம்ஐ17 ரக ஹெலிகாப்டர்கள், சினூக் ஹெலிகாப்டர்கள், ஏஎல்எச் துருவ் ரக ஹெலிகாப்டர்கள் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த வீரர்களும் இரவும் பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழை வெள்ளத்தில் தண்ட வாளங்கள் சேதமடைந்து சரக்கு, பயணிகள் ரெயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு ரெயில் நிலையங்களில் நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 7