தொடர் மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

மழை தொடர்ந்து பெய்து வருவதால் சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகிறது கடந்த 2 நாட்களாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெருமழை காரணமாக அணைகள் நிரம்பி வழிகிறது.இதைத்தொடர்ந்து இன்று காலை 6.00 மணிக்கு கக்கி ஆலக்கோடு பம்பா ஆகிய மூன்று அணைகள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்னும் சில மணி நேரங்களில் பம்பை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இன்று காலை 6 மணி முதல் பக்தர்கள் நிலக்கல்லிலிருந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மாலையில் நிலவரத்தை கண்காணித்த பின்னர் பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்று பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

50 − 40 =