தொடர்ந்து 4-வது முறையாக பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்த இந்தியா

2-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 263 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், இந்திய அணியின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 2-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா தொடர்ச்சியாக 4-வது முறையாக தக்கவைத்துக்கொண்டது. பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துள்ள இந்தியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 3 =