தொடக்க, நடுநிலை மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து வரும் 30 ல் முடிவு: கல்வித்துறை அமைச்சர் தகவல்!!!

தமிழ்நாட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 30ஆம் தேதி முதல்வர் முடிவெடுப்பார் என்று  கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 6 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை பள்ளிகளை திறப்பது தொடர்பான அறிக்கை முதலமைச்சரிடம் இன்று அளிக்கப்படவுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியாதவது.,”தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பு பற்றியும், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாகவும் வரும் 30 ஆம் தேதி நடக்கும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படும். மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனை அடிப்படையில் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.

பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வேறுபட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர். சிலர் 1 முதல் 5 ஆம் வகுப்புகளை தொடங்கலாம் என்றும், சிலர் 1 முதல் 8ஆம் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 6 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை பள்ளிகளை திறப்பது தொடர்பான அறிக்கை இன்று முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

24 − 21 =