தைப்பூசத்திற்கு பழனி முருகன் கோயில் செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

முருகன், தமிழ்க்கடவுள் என்று அனைவராலும் கொண்டாடி மகிழும் தெய்வம். அப்படிப்பட்ட முருகனைக் கொண்டாடும் திருவிழாக்களில் முக்கியமானவை வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகும். இவற்றில் தைமாதம் வரும் பூச நட்சத்திரம் மிகவும் சிறப்புடையது. இந்த ஆண்டு தைப்பூசம் (பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி) தை மாதம் 22ம் தேதி வருகிறது.

இந்நிலையில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, மயிலாடுதுறையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.பிப்ரவரி 4,5 ஆகிய இரு தினங்களில் மயிலாடுதுறையில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் ரயில், பழனிக்கு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு சென்றடையும்.மறு மார்க்கத்தில் பிப்ரவரி 5,6 ஆகிய இரு தினங்களில் பழனியில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் , மயிலாடுதுறைக்கு காலை 10.30 மணிக்கு சென்றடையும்.அதே போல் பிப்ரவரி 5,6 ஆகிய இரு தினங்களில் மயிலாடுதுறையில் காலை, 7.15 மணிக்கு புறப்படும் மற்றொரு ரயில் பழனிக்கு பகல் 1.15 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கத்தில், அதே தினங்களில் பழனியில் பகல் 2 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு இரவு, 8.30 மணிக்கு சென்றடையும்

இந்த சிறப்பு ரயில்கள் மயிலாடுதுறை- கும்பகோணம்- பாபநாசம்- தஞ்சாவூர்-உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 13 = 22