கர்நாடகாவில் இந்தாண்டு முதல் தேசிய கல்விக் கொள்கை அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் சி.என்.அஸ்வத் நாராயண் இத்தகவலை வெளியிட்டுள்ளார். நாட்டிலேயே தேசிய கல்விக் கொள்கையை முதன்முதலில் அமல்படுத்தும் மாநிலம் என்ற பெயரை கர்நாடகா பெற்றுள்ளது.
கடந்த மாதம் ஜூலை 29ஆம் தேதி அன்று மத்திய அரசு போட்ட ஒப்புதலின்படி பள்ளிக்கல்வியிலும் உயர் கல்வியிலும் சீர்திருத்தங்களை கொண்ட தேசியக் கல்விக் கொள்கையை அனைவருக்கும் தரமான, சமமான, குறைந்த கட்டணத்திலான கல்வி வழங்குவதை தேசியக் கல்விக் கொள்கை உறுதிப்படுத்தும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
தமிழக அரசு தேசியக் கல்விக் கொள்கையின் அதிகாரங்கள் மத்திய அரசு வசம் குவிக்கப்பட்டிருப்பதாகவும் இதில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டியிருப்பதாகவும் கூறி அதை எதிர்த்து வருகிறது,