தேசிய ஒருமைப்பாட்டு வாரம் நிறைவு

காரைக்காலில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவின் நிறைவு நாளான இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு பொதுப்பணித்துறை மூலம் இன்று கடற்கரைச் சாலையில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட ஆட்சியர் முகம்மது மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், துணை ஆட்சியர் (வருவாய்) ஆதர்ஷ், பொதுப்பணிதுறை கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகரன் செயற்பொறியாளர் வீரசெல்வம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மூலம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழாவும் மற்றும் பல்வேறு கல்லூரிகளிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − = 10