தெலுங்கானாவில் உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு போலீஸ் கான்ஸ்டபிள் பலி

தெலுங்கானா மாநிலம், தெகந்தராபாத் ஆசிப் நகரில் உள்ள காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர் விஷால்(24). இவர் மொரட்பள்ளியில் உள்ள ஜீம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல நேற்று இரவு 8 மணியளவில் ஜீம்மிற்கு வந்த விஷால் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென விஷாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

 இதனால், உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இடத்திலேயே விஷால் சுருண்டு விழுந்தார். விஷால் மயங்கி விழுந்ததை கண்ட அங்கு பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விஷாலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ஜீம்மில் உடற்பயிற்சி செய்தபோது விஷால் சுருண்டு விழும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − = 18