
ஜியோன்புக் என்று அழைக்கப்படும் ஆசியா பசிபிக் மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டிகளின் இரண்டாவது பதிப்பு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
2023ம்ஆண்டிற்கான இந்த போட்டி கடந்த மே மாதம் 12ம் தேதி முதல் 20 தாம் தேதி வரையில் தென்கொரியாவில் நடந்தது. இந்த போட்டிகளுக்கு இண்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் கேம்ஸ் அசோசியேஷன் ஏற்பாடு செய்திருந்தது. 26 பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் 13 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் டாக்டர் விஜயா தடகள போட்டிகளில் கலந்து கொண்டு அசத்தினார். ஐம்பது வயதை கடந்த மகளிர்கான 100 மீட்டர் 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட டாக்டர் விஜயா மூன்று சில்வர் பதக்கங்களை வென்று அசத்தினார்.
இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் விஜயா கடந்த 2021ம் ஆண்டு சென்னையில் நடந்த சென்னை மாஸ்டர்ஸ் தடகள போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றேன் பின்னர் மாநில அளவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கம் கைப்பற்றினேன் இதை தொடர்ந்து நடந்த 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டிகளில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் கைப்பற்றினேன் கடந்த 2022ம் ஆண்டு பெங்களூரு நகரில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று 100 மீட்டர் 200 மீட்டர் தடகள போட்டிகளில் இரண்டு தங்க பதக்கம் வென்றேன் என தெரிவித்தார்.