தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் குற்றாலம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரின் கணவரும், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான திமுகவைச் சேர்ந்த அசோக் பாண்டியன், மற்றும் தமிழ்நாடு கிராம வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முத்து, ஆகியோர் தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
புதிதாக இணைந்தவர்களுக்கு மாவட்ட தலைவர் சால்வை அணிவித்து புதிய உறுப்பினர் கார்டுகளை வழங்கினார், நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர் முருகன், ஒன்றிய பார்வையாளர் செந்தூர்பாண்டியன், ஒன்றிய பொதுச் செயலாளர் ராம்குமார், மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் குற்றாலிங்கம், தென்காசி நகரத் தலைவர் மந்திரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், பிலேவேந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.