தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் பெருமாள் பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் ஊராட்சி நிதியை மோசடி செய்து வருவதாகவும், அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் துணை போவதாகவும், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஊர் பொதுமக்கள் சார்பில் புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் பெருமாள்பட்டி ஊராட்சியில் தலைவராக இருப்பவர் குருவம்மாள், ஊராட்சி செயலாளர் சீனியம்மாள் இவர்கள் இருவரும் அதே ஊராட்சியில் துணை தலைவராக இருந்து வரும் மாரியம்மாள் என்பவரின் கையெழுத்தை போட்டு அரசு நிதியை பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு பணி நீக்கம் செய்து விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே உடனடியாக ஊராட்சி மன்றத் தலைவரையும் ஊராட்சி செயலாளரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும், ஊராட்சி உறுப்பினர்களை வைத்து கூட்டம் நடத்தி பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது, இந்த புகார் மனுவினை பெருமாள்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் அளித்தனர்.