தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரனிடம் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் நாடார் கோரிக்கை மனுவினை அளித்தார்.
அந்த மனுவில், தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீராணம், சுரண்டை, சுந்தரபாண்டியபுரம் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்தப் பகுதிகளில் விவசாயம் தான் பிரதான தொழில் ஆகையால் இந்த வருடம் நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் தற்போது வரை நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. எனவே தாங்கள் விவசாயிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு சுரண்டை மற்றும் சுந்தரபாண்டிய புரம் பகுதியில் விரைவாக தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க ஆணை பிறப்பிக்க கேட்டுக் கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் தென்காசி நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர், மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன், காஜா மைதீன், ஈஸ்வரன், தேவராஜன், சுரண்டை பிரபாகரன், தேவேந்திரன், பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.