தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டங்கில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க தென்காசி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு இன்று அனைத்து துறை அலுவலர்கள் உடனான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு முதன்முறையாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு டிசம்பர் 8 அன்று வருகை தர உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். முதல்வர் தென்காசி மாவட்டத்தின் மீது தனி கவனம் செலுத்தி இம் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். எனவே இவ்விழா சிறப்பாக நடைபெறும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளில் தனி கவனம் செலுத்தி ஒருங்கிணைந்து பணிகளைமேற்கொள்ளவேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தனுஷ் குமார் எம் பி, சட்டமன்ற உறுப்பினர் ராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மைக்கேல் ஆண்டனி பெர்னாண்டோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், அனைத்து துறை முதல் நிலை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.