தென்காசி மாவட்டம்  புளியங்குடி வீராச்சாமி  செட்டியார் பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

தென்காசி மாவட்டம்  புளியங்குடி எஸ். வீராச்சாமி  செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில்   சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது, இவ்விழாவிற்கு  எஸ்.வி. சி கல்வி குழுமத்தின் தாளாளர்  எஸ்.வி. முருகைய்யா தலைமை பொறுப்பு வகித்து மாணவர்களுக்கு சமத்துவ பொங்கல் கொண்டாடுவதன் நோக்கம் பற்றியும் தமிழரின் பாரம்பரிய கலாச்சாரம் பற்றியும் எடுத்துரைத்தனர்.

மேலும் இவ்விழாவிற்கு கல்லூரியின் முதல்வர்  ஆர்.ராதா கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார், தொடர்ந்து மாணவர்களுக்கு கோலப்போட்டி, சிலம்பம் மற்றும் நாட்டுப்புற நடனம், இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, மேலும் இவ்விழாவில் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 3