தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனையில் 50-வது ஆண்டு பொன்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனைக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மருத்துவ அலுவலர் மருத்துவர் யாசிர் அராஃபத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்கள் சொந்த செலவில் மருத்துவமனை கட்டிடங்களின் உள்புறம் பெயிண்ட் அடித்து புதுப்பித்தல், அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் போன்ற பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பெயிண்ட் அடித்தல், ரத்த அழுத்தம், மற்றும் சர்க்கரை அளவை சரி பார்க்கும் உபகரணங்கள், நெபுலைசர் மற்றும் சுவாச நோய்களுக்கு தேவையான உபகரணங்கள் கட்டிடங்களின் பராமரிப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டது. ஒத்துழைப்பு வழங்கிய மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ அலுவலர் கோதாரி யாசர் அராஃபத் பாராட்டுக்களை தெரிவித்து நன்றி கூறி நிறைவு செய்தார்.