தென்காசி மாவட்டம் புளியங்குடி மீனாட்சி திரையரங்கில் சேப்பாக்கம் விளையாட்டு துறை அமைச்சரும் இளைஞரணி மாநிலத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த கண்ணை நம்பாதே திரைப்படத்தை புளியங்குடி நகரக் திமுக செயலாளர் அந்தோணிசாமி, நகர் மன்றத் தலைவர் விஜயா சௌந்தர பாண்டியன் தலைமையில் தொடங்கி வைத்து, முதல் காட்சி திரை படத்தை காண வந்த ரசிகர்களுக்கு லட்டு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் வேலுச்சாமி பாண்டியன், நகர் மன்ற உறுப்பினர்கள் காந்திமதியம்மாள், ரெஜிக்கலா, உமா மகேஸ்வரி, வாசுதேவநல்லூர் பேரூர் திமுக செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியம், விஜயா பாண்டியன், பொன்னுதுரைச்சி, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், முருகேசன், விக்ரம் மணிகண்டன், சந்திரன், முத்துச்செல்வம், தகவல் தொழில் நுட்ப அணி சுந்தர், குருராஜ், மாணவரணி சதீஷ், சக்தி, கார்த்திக், ஆகியோர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த திரைப்படம் கண்ணை நம்பாதே வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.