தென்காசி மாவட்டம், புளியங்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா மற்றும் திமுக இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம், புளியங்குடி நகர கழகம் சார்பாக நடைபெற்றது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா ஈஸ்வரன் தலைமை வகித்து, சிறப்புரையாற்றினார். புளியங்குடி நகர அவைத்தலைவர் வேலுச்சாமி பாண்டியன், நகரச் செயலாளர் அந்தோணிசாமி, நகர்மன்ற தலைவர் விஜயா சௌந்தர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமைக் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் கழகத் தலைவரின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார், நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மேல நீலீதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரிய துரை, மாவட்ட பொருளாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, நகர, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.