தென்காசி மாவட்டம் புளியங்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது.
புளியங்குடியில் நடைபெற்ற விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா தலைமையில், புளியங்குடி திமுக நகர செயலாளர் அந்தோணிசாமி, நகர் மன்ற தலைவர் விஜயா சௌந்தரபாண்டியன் மற்றும் அவைத் தலைவர் வேலுச்சாமி பாண்டியன் முன்னிலையில் கழக உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 70 பேர் ரத்த தானம் வழங்கினர்.புளியங்குடி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் செல்லும் வழியில் கலைஞர் நகரில் 70 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மேலும் புளியங்குடி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, மதிய உணவு வழங்கி சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் சாகுல் ஹமீது பொதுக்குழு உறுப்பினர், காஜா மைதீன், கருப்பசாமி நகர துணை செயலாளர், ஆசை கனி, காந்திமதி அம்மாள், அருணாச்சலம், சுரேஷ், பெருமாள் மாரிச்செல்வம், கார்த்திக், முகமது அப்துல் சுபேர், சதீஷ், ஜெகதீசன், சங்கீதா, யமுனா, கவிதா மாரியப்பன், உமா மகேஸ்வரி, மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் சுரேஷ், சிங்கிலிபட்டி ஜெகதீஷ் மற்றும் சங்கரன் கோவில் ரத்த வங்கி மருத்துவர் அகிலாண்ட பாரதி, ராஜாமணி, தங்கம், அழகு தாய், திருமலையாச்சி, முப்பிடாதி மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு முதல்வரின் பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.