தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி கருப்பாநதி அணைக்கட்டு அருகில் அமைந்துள்ள அருள்மிகு பூரணம் பெரியசாமி அய்யனார், ராஜராஜேஸ்வரி, கருஞ்சிவலிங்கம், புஷ்பகலைகோவில் முன்பு வற்றாத நதியான கருப்பாநதி ஆற்றில் தை அமாவாசை திதி நேற்று துவங்கி இன்று அதிகாலை 3-20 மணிவரை உள்ளது. புனித நீராடிபிதுர் காரியங்களை செய்யவும் பிற திதிகளில் இறந்த முன்னோர்களின் விடுபட்ட திதியை இந்த தை அமாவாசை அன்று செய்து காரியத்தை சமன் செய்யவும் நம் முன்னோர்களின் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் நமக்கும் நமது சந்ததியினருக்கும் பல அசுப பலன்களை தருவதைப் போல முன்னோர்களின் இறந்த அன்று ஆண்டுதோறும் முன்னோர்களை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்களுக்கு உரிய முன்னோர் சிரார்த்தத்தை செய்ய வேண்டும்.
ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசையில் தர்ப்பணம் செய்யலாம் தாய், தந்தையை குறிக்கும் கிரகங்கள் சூரியன், சந்திரன், இந்த ரெண்டு கிரகங்கள் இணைந்த நாளே அமாவாசையாகும் இந்நாளில் ஆற்றில் தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடினர், மேலும் சொக்கம்பட்டி திரிகூடபுரத்திலிருந்து 3- கிலோ மீட்டரில் அமைந்துள்ள ஆற்றிற்கு செல்ல 60 அடி அகலம் கொண்ட தார் சாலை 30 அடியாக குறைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் பொதுமக்கள் இருசக்கர வாகனத்திலும், நான்கு சக்கர வாகனத்திலும் அதிகம் வரத்துள்ளதால் போக்குவரத்து நெருக்கடி உள்ளது, மேலும் ஆற்றைக் கடக்க பெரியோர்களும், குழந்தைகளும் சிரமப்படுவதால் ஆற்றில் பாலம் அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.