தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் சிராஜுல் மில்லத் அறக்கட்டளை சார்பில் இப்தார் நிகழ்ச்சி இக்பால்நகர் ஹிதாயத்துல் இஸ்லாம் துவக்க பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் இப்தார் நோன்பின் சிறப்பையும் இஸ்லாம் மக்களின் சிறப்புக்களை பற்றியும் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத் தலைவர் செய்யது சுலைமான், பொருளாளர் இபுறாகீம், வி.எம்.ஜபருல்லாகான், முகமதுகோயா, ஹாஜாமைதீன், ரஹ்மத்துல்லா, இந்தியூசுப், அப்துல் காதர், சுல்தான், முஹம்மது ஷா, செய்யது மசூது, இஸ்மத், நயினார் முஹம்மது, கடையநல்லூர் நகர்மன்ற உறுப்பினர் சேயன் இபுறாகீம், இஸ்மாயில், சேகுதுமான் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.