தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் விருது வழங்கும் விழா

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கொரோனா காலத்தில் பொது மக்களுக்கு அன்றாட தேவையான அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள், மற்றும்  மருத்துவ உபகரணங்கள் முதலியனவற்றை ஒவ்வொரு வீடு வீடாக சென்று உதவி செய்த ஐ- நியூஸ் அறக்கட்டளை சார்பாக சமூக சேவை செய்த நல் உள்ளங்களுக்கு டாப் 10 விருது வழங்கும் விழா கடையநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஐ- நியூஸ் அறக்கட்டளை தலைவர் சேக் தலைமை வகித்தார், முன்னிலை முகமது மீரான், அமுதக் கண்ணன், மஞ்சு பீர்முகமது, ஷரிப், ஆறுமுகசாமி, சாகுல் ஹமீது சட்ட ஆலோசகர், வரவேற்புரை அல் அமீன் ஆலோசனை குழு தலைவர் மற்றும் வாழ்த்துரை எழுத்தாளர் சேயான் இப்ராஹிம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்த அய்யாதுரை பாண்டியன், ஆய்க்குடி அமர்சேவா சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஈஸ்வரன், கவிஞர் கலாப்ரியா, கடையநல்லூர் பிரின்ஸ் மருத்துவமனை நிறுவனர் சஞ்சீவி, நெல்லை அப்துல் மஜீத், சிவமணி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறந்த சமூக சேவகருக்கான விருதுகளை பெற்றுச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் சரவணன் அனைவரையும் வரவேற்று நன்றியுரை ஆற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 3 =