தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஒன்றிய குழு கூட்டம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமை வைத்தார், துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஆணையாளர் கந்தசாமி முன்னிலை வைகித்தனர். முறையாக கூட்டம் நடைபெறுவதை தெரியப்படுத்தி அஜெண்டா கொடுக்காததால் மாரியம்மாள், அருணாச்சல பாண்டியன், கீதா மணிகண்டன், ரோஜா முருகன், மாரிச்செல்வி, அதிமுக கவுன்சிலர் சத்திய கலா தீபக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் சிங்கிலிபட்டி மணிகண்டன், பகவதியப்பன், சித்ரா கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் போகநல்லூர் மயான நன்மை கூடம் அமைத்தல், சொக்கம்பட்டி நேதாஜி தெரு, பசும்பொன் 2-வது தெரு, சிமெண்ட் தளம் அமைத்தல், நயினாநகரம், சங்குபுரம் அப்துல் கலாம் நகர் பகுதியில் வாருகால் அமைத்தல், பெருமாள் கோயில் தென்புறம் சிமெண்ட் தளம் அமைத்தல், திரிகூபுரம் பாத்திமா நகர் கீழத்தெரு சிமெண்ட் தளம் அமைத்தல், தெற்கு குளம் மறுகால் ஓடையில் தடுப்பு சுவர் அமைத்தல், சமுதாய நலக்கூடம், சின்னத்தம்பி நாடானூர் அம்மன் கோவில் தெருவில் வளாகத்தில் சமுதாய நலகூடம் அமைத்தல், பூ பாண்டிபுரம் அம்மன் கோயில் தெரு, துரைச்சாமிபுரம் பிள்ளையார் கோவில்தெரு சிமெண்ட் சாலை அமைத்தல், புன்னையாபுரம் ஊராட்சி ஊரணியில் நீர் வெளியேற்ற சிமெண்ட் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.