தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் திமுக நகர செயலாளர் எஸ்- அப்பாஸ் தலைமையில் பெண்ணுரிமை போராளி, திமுக துணை பொதுச்செயலாளர், தூத்துக்குடி எம்பி, கவிஞர், தமிழக முதல்வர் ஸ்டாலின் தங்கை, கனிமொழி கருணாநிதியின் 55- வது பிறந்த நாளை கடையநல்லூர் மணிக்கூண்டு பள்ளிவாசல் முன்பாக கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
அரசு பேருந்துகளில் செல்லும் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் கேக் வழங்கினர், இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளருமான மா. செல்லத்துரை, திமுக நகர செயலாளர் எஸ். அப்பாஸ், நகர்மன்ற தலைவர் மூப்பன்ஹபீபுர் ரகுமான், அவைத்தலைவர் பெட்டி முருகன்,10-வது வார்டு உறுப்பினர் முருகன், 11-வது வார்டு உறுப்பினர் முகைதீன் கனி, 13- வது வார்டு உறுப்பினர் திவான் மைதீன் 26- வது வார்டு உறுப்பினர் ராமகிருஷ்ணன், காளிமுத்து, இத்தாலியன்பீரப்பா, சாகுல் ஹமீது, செய்யது மசூது, வஹாப், மசூது, நகரத் துணைச் செயலாளர் காசி, திரி கூடபுரம் செய்யது மீரான், ராஜலட்சுமி, உள்பட500-க்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்கள், கிளைக் கழகச் செயலாளர், சார்பு அணி நிர்வாகிகள்,ஆகியோர் கலந்து கொண்டனர்.